Advertisment

பாலிவுட்டை அதிரவைக்கும் சாம் சி.எஸ்

sam cs vikram vedha theme music goes viral

'ஓர் இரவு' படத்தின்மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான சாம்சி.எஸ், விக்ரம் வேதா படத்தின் மூலம் தமிழ் திரை உலகையேதன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார். அப்படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்ற தீம் மியூசிக் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டடித்தது. இதனைத்தொடர்ந்து கைதி, அடங்கமறு, சாணிக்காயிதம், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ராக்கெட்ரி போன்ற படங்களுக்கு இசையமைத்து பலரின் ஃபேவரைட்டாக மாறிப்போனார்.

Advertisment

இந்நிலையில் விக்ரம் வேதா படத்தின் இந்தி ரீமேக் ட்ரைலர்பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக தமிழ் பதிப்பின் பின்னணி இசையை போலவே இந்திபதிப்பின் பின்னணி இசையும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதன் மூலம் பாலிவுட் திரையுலகினர் மத்தியில் சாம்சி.எஸ்ஸுக்கு பாராட்டுக்கள் குவிந்ததோடு, அடுத்தடுத்து இந்தி பட வாய்ப்புகளும் தேடி வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே இந்தி மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழி படங்களுக்கும்இசையமைத்து வருகிறார்.

Advertisment

sam cs
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe