Skip to main content

வியட்நாமிய மொழி படத்திற்கு இசையமைத்த பிரபலத் தமிழ் இசையமைப்பாளர்!

Published on 22/12/2020 | Edited on 22/12/2020

 

sam cs

 

பீட்டர் ஹெய்ன், இந்திய சினிமாவின் முன்னணி சண்டைக்காட்சி இயக்குனர் ஆவார். இவர், 'சாம் ஹொய்' என்ற வியட்நாமிய படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். குத்துச் சண்டையை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்திற்கு, இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

 

சமீபத்தில் வெளியாகிய இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இப்படம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 15-ஆம் தேதி வியட்நாமில் வெளியாகவுள்ளது. இதனையடுத்து, சாம் சி.எஸ் மற்றும் பீட்டர் ஹெய்னுக்கு பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாலிவுட் தொடருக்கு இசையமைத்திருக்கும் சாம் சி.எஸ்

Published on 15/02/2023 | Edited on 15/02/2023

 

Sam C.S. has composed music for Bollywood series

 

'ஓர் இரவு' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான சாம் சி.எஸ்., விக்ரம் வேதா படத்தின் மூலம் பலரது கவனத்தைப் பெற்றார். குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்ற தீம் மியூசிக் பலரின் பாராட்டைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து கைதி, அடங்கமறு, சாணிக்காயிதம், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ராக்கெட்ரி  போன்ற படங்களுக்கு  இசையமைத்து கவனிக்கப்படும் இசையமைப்பாளராக வலம் வருகிறார். 

 

இந்த நிலையில் இந்தியில் வெளியாகவிருக்கும் 'தி நைட் மேனேஜர்' எனும் இணையத் தொடருக்கு இசையமைத்திருக்கிறார். இத்தொடர் ஹாலிவுட்டில் 2016 ஆம் ஆண்டு வெளியானது. ஆறு அத்தியாயங்களாக வெளியான இத்தொடர் தற்போது அதே பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டிருக்கிறது. 

 

இதில் 'பொன்னியின் செல்வன்' புகழ் நடிகை சோபிதா துலிபாலா, பாலிவுட் நடிகர்கள் அனில் கபூர், ஆதித்யா ராய் கபூர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரியங்கா கோஷ், ரூக் நபீல், சந்திப் மோடி ஆகியோர் இணைந்து இயக்கியிருக்கும் இந்த தொடர், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் பிப்ரவரி 17 ஆம் தேதியன்று வெளியாகிறது. இத்தொடர் மூலம் இந்தியிலும் பிரபலமடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Next Story

பாலிவுட்டை அதிரவைக்கும் சாம் சி.எஸ்

Published on 10/09/2022 | Edited on 10/09/2022

 

sam cs vikram vedha theme music goes viral

 

'ஓர் இரவு' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான சாம் சி.எஸ், விக்ரம் வேதா படத்தின் மூலம் தமிழ் திரை உலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார். அப்படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்ற தீம் மியூசிக் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டடித்தது. இதனைத்தொடர்ந்து கைதி, அடங்கமறு,  சாணிக்காயிதம், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ராக்கெட்ரி  போன்ற படங்களுக்கு  இசையமைத்து பலரின் ஃபேவரைட்டாக மாறிப்போனார். 

 

இந்நிலையில் விக்ரம் வேதா படத்தின் இந்தி ரீமேக் ட்ரைலர் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக தமிழ் பதிப்பின் பின்னணி இசையை போலவே இந்தி பதிப்பின் பின்னணி இசையும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதன் மூலம் பாலிவுட் திரையுலகினர் மத்தியில் சாம் சி.எஸ்ஸுக்கு பாராட்டுக்கள் குவிந்ததோடு, அடுத்தடுத்து இந்தி பட வாய்ப்புகளும் தேடி வருவதாக கூறப்படுகிறது.  இதனிடையே இந்தி மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழி படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.