Advertisment

விஜய் சேதுபதி படத்தில் பிரபல இசையமைப்பாளர்!

vjs

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றை தமிழ் சினிமாவில் படமாக எடுக்க இருக்கின்றனர். இந்த படத்தில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கின்றார்.

Advertisment

உலக கிரிக்கெட்டில் இவருடைய பந்து வீசும் முறை பலரையும் ஆச்சர்யத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. அந்தளவிற்கு மிகவும் வேறுமாதிரியான ஸ்டைல். டெஸ்ட் கிரிக்கெட்டில் சுமார் 800 விக்கெட்டுளை எடுத்திருக்கிறார்.

Advertisment

கனிமொழி' படத்தை இயக்கிய எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். இதற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கரோனா அச்சுறுத்தலால் இதன் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராணாதான் இப்படத்தை தயாரிக்கிறார் என்று கூறப்பட்டது. முதலில் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியானபோது, தமிழகத்தில் பல அரசியல் கட்சி தலைவர்கள், தமிழ் தேசிய சித்தாந்தத்தை பின்பற்றுபவர்கள் இதில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என்று எதிர்ப்புகள் கிளம்பின. ஆனாலும், தான் இந்த படத்தில் நடிப்பேன் என்று உறுதியாக தெரிவித்துவிட்டார் விஜய் சேதுபதி.

தற்போது இப்படம் குறித்து புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதில் இப்படத்தில் இசையமைப்பாளராக சாம் சி.எஸ் பணிபுரியவுள்ளார். சமீபத்தில் அவரது பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையில், ''முத்தையா முரளிதரன் 800 விக்கெட்களை வீழ்த்தியவர் என்பதால், அவருடைய வாழ்க்கை வரலாற்றுப் படத்துக்கு '800' என்றே பெயரிட்டுள்ளனர்'' என்று சாம் சி.எஸ் தெரிவித்துள்ளார்.

sam cs Vijay Sethupathi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe