/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/429_11.jpg)
சர்தார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. முதல் பாகத்தில் நடித்திருந்த ராஷி கண்ணா, லைலா, ரஜிஷா விஜயன், யூகி சேதி உள்ளிட்ட நடிகர்கள் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகின்றனர். இவர்களோடு புதிதாக மாளவிகா மோகனன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் புதிதாக இணைந்து நடித்துள்ளனர்.
முதல் பாகத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்த நிலையில் இரண்டாம் பாகத்தில் அவருக்கு மாற்றாக யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஜூலையில் தொடங்கி பட கட்டங்களாகப் பல இடங்களில் நடந்து வருகிறது. இதனிடையே படத்தின் டப்பிங் பணிகள் சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/428_14.jpg)
இந்த நிலையில் இப்படத்தில் இசையமைப்பாளர் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யுவன் ஷங்கர் ராஜாவுக்கு பதில் சாம்.சி.எஸ். இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. சாம் சி.எஸ். இதற்கு முன்பாக கார்த்தி படத்திற்கு கைதி படத்தில் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)