Advertisment

ஆன்லைனில் ஏமாற்றப்பட்ட பிரபல இசையமைப்பாளர்! 

sam cs

'புரியாத புதிர்', 'விக்ரம் வேதா', 'கைதி' உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து மிகவும் பிரபலமானவர் இசையமைப்பாளர் சாம்.சி.எஸ். இவருடைய பின்னணி இசை மிகவும் தனித்துவம் வாய்ந்தது.

Advertisment

இந்நிலையில் சாம் சி.எஸ் ஆன்லைனில் பொருள் வாங்கி ஏமாற்றப்பட்டுவிட்டதாக ட்விட்டரில் பதிவிட்டிருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Advertisment

இதுகுறித்து அவர் பதிவிடுகையில், "என்னுடைய சகோதரருக்குபிறந்த நாள் பரிசாக ஒரு ஆப்பிள் வாட்ச் ஆன்லைனில் வாங்கினேன். அது வந்த போது அதைப் பார்த்து அதிர்ச்சி ஆனோம். அதில் கற்களை மிக அழகாகப் பேக் செய்து அனுப்பி வைத்திருந்தார்கள். அது பற்றி புகார் அளித்த போது அந்த நிறுவனம் எங்களது புகாரை நிராகரித்து, பணத்தை திருப்பித் தர முடியாது எனக் கூறி விட்டனர். இதனால் தயவுசெய்து இந்த நிறுவனத்திலிருந்து வாங்காதீர்கள். அவர்கள் ஏமாற்றுக்காரர்கள்" என சாம் சி. எஸ் கூறியிருக்கிறார்.

இந்தப் பதிவில் கமெண்ட் செய்யும் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியாகியுள்ளனர். பிரபல இசையமைப்பாளருக்கே இந்த நிலைமையா என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். சாம்.சி.எஸ் அடுத்த பல படங்களுக்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதில் ஒரு பிரம்மாண்ட படம்தான் மாதவன் நடிக்கும் 'ராக்கெட்ரி'.

sam cs
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe