கபாலி, காலாபடத்திற்குபிறகு பா.ரஞ்சித்இயக்கி வரும் படம்சல்பேட்டா. இப்படத்தில் ஆர்யாகதாநாயகனாக நடிக்கிறார். வடசென்னை குத்துச்சண்டை வீரர்களின்கதைஎன்பதால், ஆர்யாதீவிரஉடற்பயிற்சி மூலம் கட்டுக்கோப்பாக மாற்றியுள்ளார். அப்படங்கள் ஏற்கனவே சமூகவலைத்தளங்களில் வைரலானது.
தற்போது சல்பேட்டா படத்தின்ஷூட்டிங்ஸ்பாட்டில், இயக்குனர் ரஞ்சித்துடன் குத்துச்சண்டை போடுவதுபோன்ற படங்களைதனதுட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்ததோடு, படக்குழுவினரையும் பாராட்டியுள்ளார் ஆர்யா. அதில்"இந்த அருமையான படத்திற்குநன்றி பா.ரஞ்சித்.இதைவிடசிறந்தவிளையாட்டைபற்றியபடத்தைநான்எதிர்பார்க்கமுடியாது. நீங்கள் மிகச்சிறந்தவர்"எனக்கூறியுள்ளார். மேலும் "முரளிசார்நீங்கள் எங்கள் எல்லாரையும் விட வேகமானவர், காட்சிவிருந்துக்கு நன்றி. நீங்கள் அனைத்து எல்லைகளையும் தாண்டிவிட்டிர்கள். என் தயாரிப்பாளர் கே9 ஸ்டுடியோஸ் மட்டும் இல்லையென்றால் இந்த படத்தை நினைத்து கூட பாத்திருக்க முடியாது. கலையரசன், ஜான்விஜய், பசுபதிஎன அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். நிறைய கற்றுக்கொண்டேன்"எனவும் ஆர்யா தெரிவித்துள்ளார்.
இப்படத்தின் பர்ஸ்ட்லுக்விரைவில் வெளியாகும் எனவும் ஆர்யா அந்த ட்விட்டில் தெரிவித்துள்ள நிலையில்,படத்தின் பர்ஸ்ட்லுக்வருகிறதீபாவளி அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சல்பேட்டா படம்,1980களில் நடப்பதுபோன்ற கதைக்களத்தை கொண்டது என தகவல்கள்தெரிவிக்கின்றன.