Advertisment

கொலை மிரட்டல்; தற்காத்துக்கொள்ள சல்மான் கான் எடுக்கும் நடவடிக்கைகள்!

Salman Khan upgrades bulletproof Toyota Land Cruiser after threats

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும்,பஞ்சாபி பாப் பாடகருமானசித்து மூஸ் வாலாசமீபத்தில் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.இந்த கொலை சம்பவத்தில் டெல்லி திகார் சிறையில் இருக்கும் பஞ்சாப் தாதாலாரன்ஸ்பிஷ்னாய் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து கடந்த மாதம் நடிகர் சல்மான் கான் மற்றும் அவரது தந்தைசலீம் கான் ஆகிய இருவருக்கும்பாடகர்சித்து மூஸ் வாலாபோன்றுகொடூரமாக கொல்லப்படுவீர்கள் என்று மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அந்த கடிதமும் கூடலாரன்ஸ்பிஷ்னாய்யிடம்இருந்து வந்தாக சொல்லப்படுகிறது.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="105e4ea0-d2a2-4fa2-aae0-f464c947bd56" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Jothi-Movie-500-X-300-Ad_18.jpg" />

Advertisment

ஏனென்றால்சல்மான் கடந்த 2006 ஆம் ஆண்டு அபூர்வவகை மான்களை வேட்டையாடியதாக குற்றம் சாட்டப்பட்டு சில நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வகைமான்களை பிஷ்னாய்சமூகத்தினர் புனிதமாக கருதுகின்றனர். இதையடுத்து ஆத்திரமடைந்த லாரன்ஸ்பிஷ்னாய் இந்த மானை கொன்றதற்காக சல்மான் கானை கொன்றுவிடுவோம் எனக் கூறியிருந்தார். இதன் தொடர்ச்சியாகவேஇந்த மிரட்டல்கடிதம் வந்துள்ளதாககூறப்பட்டது.

இதையடுத்து நடிகர் சல்மான் கான் மும்பைபோலீஸ் கமிஷனரை நேரில் சந்தித்து துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் வேண்டும் என விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவருக்கு உரிமம் கிடைக்கவில்லை என தெரிகிறது.

இந்நிலையில் நடிகர் சல்மான் கான் தான் வழக்கமாகபயன்படுத்தும் டொயோட்டோ லேண்ட் க்ரூஸர் காரை குண்டுகள் துளைக்காதவாறு புல்லட் ப்ரூப் கண்ணாடிகளைக் கொண்டு பொறுத்தியுள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் சில பாதுகாப்பு அம்சங்களை சல்மான் கான் மேற்கொண்டுள்ளதாகவும்கூறப்படுகிறது.

threat Bollywood Salman Khan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe