
பாலிவுட் நடிகர் சல்மான் கான், தற்போது 'டைகர் 3', 'கிஸி கா பாய் கிஸி கி ஜான்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் 'கிஸி கா பாய் கிஸி கி ஜான்’ வருகிற 21ஆம் தேதி (21.04.2023) வெளியாகவுள்ளது. இப்படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் வெங்கடேஷ் டகுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஃபர்ஹாத் சம்ஜி இயக்கியுள்ள இப்படத்திற்கு பாயல் தேவ் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழில் அஜித் நடிப்பில் வெளியான 'வீரம்' படத்தின் இந்தி ரீமேக்காகும்.
இப்படத்தின் 'யென்டாம்மா...' (Yentamma) பாடல் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி வைரலானது. இதில் வேஷ்டி சட்டையில் நடனமாடியுள்ள சல்மான் கான், வேஷ்டியை தொடை தெரியும்படி மடித்து கட்டி ஒரு ஸ்டெப் போடுகிறார். அது பலராலும் ட்ரோல் செய்யப்பட்டு விமர்சனத்துக்கு உள்ளானது. இது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன், தென்னிந்திய கலாச்சாரத்தை இழிவுபடுத்துவது போல் உள்ளது என விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை நடந்தது. அதில் சல்மான் கான் , பூஜா ஹெக்டே உள்ளிட்ட படக்கழுவினர் பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய சல்மான் தனது உடல் கட்டமைப்பு பற்றியும் சிக்ஸ் பேக் குறித்தும் பேசினார். முன்னதாக சல்மான் கானின் உடல் கட்டமைப்பு ட்ரோல் செய்யப்பட்டது. மேலும் அவரை அழகாக காட்ட விஎப்ஃஎக்ஸ் செய்யப்பட்டு திரையில் காண்பிக்கப்படுவதாகவும் சொல்லப்பட்டது.
அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் மேடையில் பேசிக்கொண்டிருந்த சல்மான் கான், திடீரென சட்டை பட்டன்களை கழட்டத் தொடங்கி விட்டர். பின்பு உடலமைப்பைக் காண்பித்து, "இது விஎப்ஃஎக்ஸ் (VFX) மூலம் செய்யப்பட்டது என நீங்கள் நினைக்கிறீர்களா? " என கேள்வி எழுப்பினார். மேலும் முதலில் நான்கு பேக்ஸ் தான் இருந்ததாகவும் இப்போது சிக்ஸ் பேக்காக மாறியுள்ளதாகவும் தெரிவித்தார். சல்மான் கானுக்கு 57வயது என்பது குறிப்பிடத்தக்கது.
Saw his abs live 🔥🔥🔥🔥🔥 #SalmanKhan @BeingSalmanKhan pic.twitter.com/CB4ph02xZH— SALMAN KI SENA™ (@Salman_ki_sena) April 10, 2023