salman khan talk about fans celebration in theatre

Advertisment

பிரபல பாலிவுட்நடிகர் சல்மான் கான் இயக்குநர் மகேஷ் மஞ்ச்ரேக்கர் இயக்கத்தில் 'அந்திம் தி பைனல் ட்ரூத்' என்ற படத்தின்நடித்திருந்தார். கடந்த 26 ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமீபத்தில் சில ரசிகர்கள்'அந்திம் தி பைனல் ட்ரூத்'வெளியாகும் திரையரங்குகளில்பட்டாசு வெடித்தும், சல்மான் கான் கட்டவுட்டுக்கு பாலூற்றிபடத்தை கொண்டாடும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியது.

alt="salman khan talk about fans celebration in theatre" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="6320c09f-0ead-405c-bfc1-37edfc6ed1cf" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Bachelor-article-inside-ad_11.jpg" />

இந்த விடியோவை தனது சமூகவலைத்தளபக்கத்தில் பகிர்ந்த சல்மான் கான், "திரையரங்குகளில் பட்டாசு வெடிக்க வேண்டாம். அது உங்கள் உயிருக்கும், அடுத்தவர்கள் உயிருக்கும் ஆபத்தில் முடியும். பட்டாசுகளைஅனுமதிக்க வேண்டாம் என திரையரங்க ஊழியர்களை கேட்டுக்கொள்கிறேன். சிலர் குடிக்கவே தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படும் பொழுது நீங்கள் பாலை வீணடிக்கிறீர்கள். அதைவாங்க முடியாத ஏழை குழந்தைகளுக்கு கொடுங்கள் "என குறிப்பிட்டுள்ளார்.