இந்தியா முழுவதும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மத்திய அரசு 21 நாட்களுக்குஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சினிமா தொழிலாளர்களும் இதனால் வேலை இழந்துள்ளனர்.

Advertisment

salm

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

அவர்களுக்கு உதவ தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகில் நிதி திரட்டப்படுகிறது. தமிழ்நாட்டில் திரைப்பட தொழிலாளர்கள் சங்கமான பெப்சி அமைப்புக்கு பல்வேறு நடிகர்கள் நிதி வழங்கி உள்ளனர். அதேபோல் தற்போது பாலிவுட்நடிகர் சல்மான்கான், பாலிவுட்டிலுள்ள 25 ஆயிரம் சினிமா தொழிலாளர்களுக்கு உதவுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து இந்திய சினிமா ஊழியர்கள் சம்மேளனத்தின் தலைவர் பி.என்.திவாரி பேசியபோது... ''எங்கள் அமைப்பில் மொத்தம் 5 லட்சம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்களில் கஷ்டத்தில் உள்ள 25 ஆயிரம் பேருக்கு உதவுதாக சல்மான்கான் உறுதி அளித்துள்ளார்” என்றார்.