Advertisment

'கான்'களை இயக்கும் ஏ.ஆர் முருகதாஸ்; உச்சக்கட்ட  எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

 Salman Khan Shah Rukh Khan next film helmed AR Murugadoss

'தர்பார்' படத்துக்குப் பிறகு இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் அடுத்ததாக விஜய் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதாக கூறப்பட்டது.அந்தப் படம் சில காரணங்களால் கைவிடப்பட்ட நிலையில், முருகதாஸ் இதுவரை எந்தப் படத்தையும் இயக்காமல் இருந்து வருகிறார்.

Advertisment

இந்நிலையில் இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் பாலிவுட் பக்கம் தனது கவனத்தை திரும்பியுள்ளார். அதன்படி ஏ.ஆர் முருகதாஸ் பாலிவுட்டில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் சல்மான் கான், ஷாருக்கான் ஆகிய இருவரையும் வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தில் ஷாருக்கான், சல்மான் கான் இருவரையும் நடிக்க வைக்க அமீர் கான் பெரும் முயற்சி எடுத்து வந்ததாகவும், இறுதியில் இருவரும் இணைந்து நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

Advertisment

கடந்த 1995 ஆம் ஆண்டு 'கரண் அருஜுன்' படத்தில் சல்மான் காணும், ஷாருக்கானுக்கு இணைந்து நடித்திருந்தனர். அதன் பிறகு இரு சில படங்களில் சிறிய பகுதியில் இணைந்து நடித்திருந்தாலும் முழு நீள படத்தில் இருவரும் நடிக்கவில்லை. இந்நிலையில் 27 வருடங்களுக்கு பிறகு இந்த சல்மான் கான், ஷாருக்கான் இருவரும் இணைந்து முழு படத்தில் நடிக்கவுள்ள இந்த செய்தி பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இப்படம் குறித்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Salman Khan sharukh khan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe