Skip to main content

'கான்'களை இயக்கும் ஏ.ஆர் முருகதாஸ்; உச்சக்கட்ட  எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Published on 18/07/2022 | Edited on 18/07/2022

 

 Salman Khan Shah Rukh Khan next film helmed AR Murugadoss

 

'தர்பார்' படத்துக்குப் பிறகு இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் அடுத்ததாக விஜய் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதாக கூறப்பட்டது. அந்தப் படம் சில காரணங்களால் கைவிடப்பட்ட நிலையில், முருகதாஸ் இதுவரை எந்தப் படத்தையும் இயக்காமல் இருந்து வருகிறார்.

 

இந்நிலையில் இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் பாலிவுட் பக்கம் தனது கவனத்தை திரும்பியுள்ளார். அதன்படி ஏ.ஆர் முருகதாஸ் பாலிவுட்டில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் சல்மான் கான், ஷாருக்கான் ஆகிய இருவரையும் வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தில் ஷாருக்கான், சல்மான் கான் இருவரையும் நடிக்க வைக்க அமீர் கான் பெரும் முயற்சி எடுத்து வந்ததாகவும், இறுதியில் இருவரும் இணைந்து நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. 

 

கடந்த 1995 ஆம் ஆண்டு 'கரண் அருஜுன்' படத்தில் சல்மான் காணும், ஷாருக்கானுக்கு இணைந்து நடித்திருந்தனர். அதன் பிறகு இரு சில படங்களில் சிறிய பகுதியில் இணைந்து நடித்திருந்தாலும் முழு நீள படத்தில் இருவரும் நடிக்கவில்லை. இந்நிலையில் 27 வருடங்களுக்கு பிறகு இந்த சல்மான் கான், ஷாருக்கான் இருவரும் இணைந்து முழு படத்தில் நடிக்கவுள்ள இந்த செய்தி பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும்  இப்படம் குறித்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஏ.ஆர். முருகதாஸ் - சிவகார்த்திகேயன் பட அப்டேட்

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
sivakarthikeyan ar murugadoss movie update

சிவகார்த்திகேயன் தற்போது கமல்ஹாசன் தயாரிக்கும் அமரன் படத்தில் நடித்து வருகிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். தமிழக ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் காஷ்மீரில் கொல்லப்பட்ட சம்பவத்தை வைத்து உருவாகும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இதனிடையே ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது படத்திலும் நடித்து வருகிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார். அனிருத் இசைப்பணிகளை மேற்கொள்கிறார். படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் பூஜையுடன் தொடங்கியது.

முதற்கட்ட படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கி பாண்டிச்சேரியில் நடந்து வருவதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் சிவகார்த்திகேயன் வித்தியாசமான லுக்கில் தோன்றுகிறார்.

Next Story

அடுத்த படத்திற்கு தமிழ் இயக்குநரைத் தேர்ந்தெடுத்த சல்மான் கான்

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
salman khan next with ar murugadoss

ரஜினியின் தர்பார் படத்தை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிவகார்த்திகேயனின் 23ஆவது படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர் முருகதாஸ். இப்படத்தில் ருக்மணி வசந்த் கதாநாயகியாக நடிக்க அனிருத் இசையமைக்கிறார். படப்பிடிப்பு கடந்த மாதம் பூஜையுடன் தொடங்கி முழு வீச்சில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்த படத்தை அடுத்து ஏ.ஆர் முருகதாஸ், பாலிவுட்டில் சல்மான் கானை வைத்து படமெடுக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ளது. பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான அமீர் கான், அக்‌ஷய் குமார் உள்ளிட்ட ஹீரோக்களை இயக்கிய ஏ.ஆர் முருகதாஸ் மற்றொரு முன்னணி நடிகரான சல்மான் கானை இயக்கவுள்ளார். இப்படம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ஏ.ஆர்.முருகதாஸ், “மறக்க முடியாத சினிமா அனுபவத்திற்கு தயாராகுங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.  

முதல் முறையாக இருவரும் கூட்டணி வைத்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தை தயாரிப்பாளர் சஜித் நதியாத்வாலா தயாரிக்கிறார். அடுத்த ஆண்டு ரமலான் பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சல்மான் கான், கடைசியாக டைகர் 3 படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த ஆண்டு நவம்பரில் வெளியானது. இதையடுத்து விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக 1 வருடத்திற்கும் மேலாக தகவல் உலா வந்து கொண்டிருக்கிறது. ஆனால், அப்படம் குறித்த அப்டேட் இன்னும் வெளியாகாத சூழலில் சர்ப்ரைஸாக ஏ.ஆர் முருகதாஸ் பட அறிவிப்பு வெளியாகியுள்ளது.