salman

Advertisment

எம்.எஸ். தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் ஹீரோவாக நடித்த சுசாந்த் சிங் ராஜ்புத் மன அழுத்தம் காரணமாக கடந்த வார ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது பாந்த்ரா இல்லத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சுசாந்தின் தற்கொலைக்குக் காரணம் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான் தான். மேலும் பாலிவுட்டில் நடக்கும் வாரிசு திணிப்புகளே சுசாந்த் போன்ற திறமை மிக்கவர்களின் வாய்ப்புகளைத் தடுக்கின்றது என்றும், சுசாந்த் போன்று நாங்களும் அவமானப்படுத்தபட்டுள்ளோம் என்று பல பிரபலங்களும் தெரிவித்து வருகின்றனர்.

பிஹாரிலுள்ள சுசாந்த் ரசிகர்கள், சல்மான் கான் மற்றும் ஆலியா பாட் உள்ளிட்ட வாரிசு நட்சத்திரங்களின் உருவ பொம்மைகளை எரித்துத் தங்களின் எதிர்ப்பைக் காட்டினர். இந்நிலையில் சல்மான் இதுகுறித்து ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.

Advertisment

அதில், “என்னுடைய எல்லா ரசிகர்களுக்கும் ஒரு வேண்டுகோள். சுஷாந்த் ரசிகர்களுக்கு உறுதுணையாக நில்லுங்கள். அவர்களது சாபங்களையும் வார்த்தைகளையும் கணக்கில் கொள்ளாமல் அதன் பின்னால் இருக்கும் உணர்வைப் பாருங்கள். நாம் விரும்பும் ஒருவரின் இழப்பு மிகவும் வலிமிக்கது என்பதால் அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு ஆதரவு தந்து அவர்களுடன் உறுதுணையாக நில்லுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.