Advertisment

தன்னுடைய வில்லனுக்கு ரூ.1.7 கோடிக்கு சொகுசு காரை பரிசாக வழங்கிய சல்மான் கான்!

கடந்த டிசம்பர் 20ஆம் தேதி சல்மான் கான் நடிப்பில் பிரபு தேவா இயக்கத்தில் வெளியான படம் தபாங் 3. இந்த படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சுதீப் கிச்சா வில்லனாக நடித்திருந்தார். இப்படம் வந்த சமயத்தில் சிஏஏ போராட்டாங்கள் வலுவாக இருந்ததால் படம் வசூலில் பெரிதாக எதுவும் சாதனை புரியவில்லை. வழக்கமான சல்மான் கானின் மசாலா படம் பொன்றே இதுவும் இருந்தது.

Advertisment

sudheep

தற்போது படத்தின் வசூல் வெற்றியைத் தொடர்ந்து ரூ.1.7 கோடி மதிப்பிலான பிஎம்டபிள்யூ எம்5 மாடல் காரை, சுதீப்புக்குப் பரிசாக அளித்து ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

Advertisment

இதை சுதீப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "நல்லது செய்யும்போது நமக்கு நல்லதே நடக்கும். இந்த ஆச்சரியம் என் வீட்டு வாசலில் சல்மான் கானுடன் வந்திறங்கியபோது... இந்த வரியின் மீதான என் நம்பிக்கையை சல்மான் இன்னும் உறுதி செய்தார்.

பிஎம்டபிள்யூ எம்5, ஒரு இனிமையான சைகை. என் மீதும் என் குடும்பத்தின் மீதும் நீங்கள் பொழியும் அன்புக்கு நன்றி சார். உங்களுடன் நடித்ததும், நீங்கள் எங்களை வந்து பார்த்ததும் ஒரு பெருமை" என்று குறிப்பிட்டுள்ளார்.

Salman Khan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe