Advertisment

அடுத்த படத்திற்கு தமிழ் இயக்குநரைத் தேர்ந்தெடுத்த சல்மான் கான்

salman khan next with ar murugadoss

ரஜினியின் தர்பார் படத்தை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப்பிறகு சிவகார்த்திகேயனின் 23ஆவது படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர் முருகதாஸ். இப்படத்தில் ருக்மணி வசந்த் கதாநாயகியாக நடிக்க அனிருத் இசையமைக்கிறார். படப்பிடிப்பு கடந்த மாதம் பூஜையுடன் தொடங்கி முழு வீச்சில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்த படத்தை அடுத்து ஏ.ஆர் முருகதாஸ், பாலிவுட்டில் சல்மான் கானை வைத்து படமெடுக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ளது. பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான அமீர் கான், அக்‌ஷய் குமார் உள்ளிட்ட ஹீரோக்களைஇயக்கிய ஏ.ஆர் முருகதாஸ் மற்றொரு முன்னணி நடிகரான சல்மான் கானை இயக்கவுள்ளார். இப்படம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ஏ.ஆர்.முருகதாஸ், “மறக்க முடியாத சினிமா அனுபவத்திற்கு தயாராகுங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

முதல் முறையாக இருவரும் கூட்டணி வைத்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தை தயாரிப்பாளர் சஜித் நதியாத்வாலா தயாரிக்கிறார். அடுத்த ஆண்டு ரமலான் பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சல்மான் கான், கடைசியாக டைகர் 3 படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த ஆண்டு நவம்பரில் வெளியானது. இதையடுத்து விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக 1 வருடத்திற்கும் மேலாக தகவல் உலா வந்து கொண்டிருக்கிறது. ஆனால், அப்படம் குறித்த அப்டேட் இன்னும் வெளியாகாத சூழலில் சர்ப்ரைஸாக ஏ.ஆர் முருகதாஸ் பட அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Salman Khan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe