Advertisment

''என் பெயரைப் பயன்படுத்தி வரும் அந்த மின்னஞ்சல் செய்திகளை நம்பாதீர்கள்'' - சல்மான் கான் விளக்கம்!

vdvd

உலகம் முழுவதும் கரோனா வைரஸால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் இதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் திரையுலகமும் முடங்கியுள்ள நிலையில் நடிகர் நடிகைகள் வீட்டிலேயே இருந்து வருகின்றனர். இதற்கிடையே குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் தனது பண்ணை வீட்டில் ஊரடங்கு நாட்களைக் கழித்து வரும் நடிகர் சல்மான்கானின் தயாரிப்பு நிறுவனம் தன் அடுத்த படத்தில் நடிப்பதற்கான நடிகர்களைத் தேர்வு செய்து கொண்டிருப்பதாகச் சமீபத்தில் தகவல்கள் வெளியான நிலையில் இதுகுறித்து சல்மான் கான் சமூகவலைத்தளத்தில் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்...

Advertisment

"நான் அல்லது சல்மான் கான் ஃபிலிம்ஸ் சார்பாகவோ யாரும் எந்த விதமான நடிகர்தேர்வும்நடத்தவில்லை என்பதை இதன் மூலம் தெளிவுபடுத்துகிறேன். எங்கள் படங்களில் நடிக்க,நடிகர்களைத் தேர்வு செய்ய நாங்கள் எந்தவொரு நடிப்பு முகவர்களையும் நியமிக்கவில்லை. அப்படியான புரளிகளைத் தாங்கி வரும் எந்த விதமான மின்னஞ்சல்களையும், செய்திகளையும் நம்ப வேண்டாம். சல்மான் கான் ஃபிலிம்ஸ் பெயரையோ, என் பெயரையோ அனுமதியின்றித் தவறாகப் பயன்படுத்துபவர்கள் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

Salman Khan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe