சல்மான் கானை வரவேற்ற மம்தா பானர்ஜி

salman khan meets mamta banerjee

கொல்கத்தாவில் உள்ள கிழக்கு வங்க மைதானத்தில் இன்று (13.05.2023) பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் பாலிவுட் நடிகர் சல்மான் கான், ஜாக்குலின் பெர்னாண்டஸ், பிரபுதேவா, ஆயுஷ் சர்மா. மற்றும் பூஜா ஹெக்டே உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்கின்றனர்.

இதனால் விமானம் மூலம் கொல்கத்தா வந்திறங்கிய சல்மான் கான், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்துள்ளார். கொல்கத்தாவில் உள்ள முதல்வரின் வீட்டில் நடந்த இந்த சந்திப்பில் சல்மான் கானுக்கு சால்வை அணிவித்து வரவேற்றார்.

13 ஆண்டுகளுக்கு பிறகு சல்மான் கான் மேற்கு வங்கத்துக்கு வந்ததாக கூறப்படுகிறது. முன்னதாக, அவர் நடித்த 'வான்டட்' படத்தின் ப்ரோமோஷனுக்கு கொல்கத்தா வந்திருந்தாராம்.

mamta banarji Salman Khan
இதையும் படியுங்கள்
Subscribe