கரோனா அச்சுறுத்தல்: பிக்பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார்கள்?

salman khan

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தற்போது பிரபுதேவா இயக்கத்தில் ராதே என்னும் படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் ரிலீஸாக இருக்கும் நிலையில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக தள்ளிப்போயுள்ளது.

இந்நிலையில் சல்மான் கானின் கார் ஓட்டுநருக்கும், இரண்டு ஊழியர்களுக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் சல்மான் கான் குடும்பத்தினர் பீதியில் இருக்கின்றனர். இதனால் சல்மானும் அவரது குடும்பத்தினரும் 14 நாட்கள் தனிமையில் இருக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொற்று உறுதியான பணியாளர்களுக்கு மும்பையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வருவதாக தெரிகிறது. இதுகுறித்து சல்மான் எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இதுமட்டுமல்லாமல் சல்மான் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் நிலையில் இதற்கான படப்பிடிப்பும் தடைப்படும் என்று கூறப்படுகிறது. புதிதாக வேறொரு பிரபலம் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்களா என்று சமூக வலைதளத்தில் கேள்வி எழுந்துள்ளது.

Biggboss Salman Khan
இதையும் படியுங்கள்
Subscribe