பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் சல்மான்கான், மும்பைபாந்த்ராநகரில் வசித்து வருகிறார். இத்தகைய சூழலில் கடந்த மாதம் 14ஆம் தேதி, அவரது வீட்டின் முன் அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் இரு சக்கர வாகனத்தில் வந்து, துப்பாக்கிச் சூடு நடத்தினர்.சல்மான் கானுக்குஒய்பிளஸ்பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவதுகுறிப்பிடதக்கது.
இந்தச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்தபோலீஸார், அந்த இரண்டு மர்மநபர்களைதேடி வந்தனர். பின்பு அந்த இரண்டு நபர்கள் பீகாரைச் சேர்ந்த விக்கி குப்தா (வயது 24), சாகர் பால் (வயது 21)எனக்கண்டறிந்துஅவர்களைக்கைது செய்தனர். அவர்கள் இருவரும்இந்தியாவைச்சேர்ந்தகேங்ஸ்டர்லாரன்ஸ்பிஷ்னோய்கூட்டத்தைச்சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக அவர்களுக்கு உதவிய அனுஜ்தாபன்மற்றும்சோனுசுபாஷ்உட்பட 11 பேரைபோலிஸார்கைது செய்தனர்.
இதில் அனுஜ்தாபன்என்பவர்,கஸ்டடியில்இருக்கும் போது கடந்த மே 1ஆம் தேதி இறந்துள்ளார். அவர் கழிவறையில் தற்கொலை செய்து கொண்டதாகபோலிஸார்தெரிவித்துள்ளனர். இதையடுத்து அனுஜ்தாபன்தாயார், தன் மகன்கொலை செய்யப்பட்டுள்ளதாககூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் தனது மகனின் மரணம் குறித்து விசாரணை நடத்த மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு (சிபிஐ) உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். இது தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த நிலையில்சல்மான் கான், அனுஜ்தாபனின்தாயார் தாக்கல் செய்த மனுவில் தனது பெயரை நீக்கக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில்மனுதாக்கல் செய்துள்ளார். இது தொடர்பாகசல்மான் கானின்வழக்கறிஞர் கூறியதாவது, “உண்மையில் இந்த வழக்கில்சல்மான் கான்தான் பாதிக்கப்பட்டவர். அவரைகுறிவைத்துதான் இந்த தாக்குதல் நடந்துள்ளது. இதற்குபின்னால்யார் இருக்கிறார்கள் எனஅவருக்குத்தெரியவில்லை. யார்கைதானதுகூட தெரியவில்லை. அதனால்சல்மான் கான்மேல் குற்றம் சொல்வது, தவறான ஒன்று. அதோடு அவரது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் செயலாகவும் இருக்கிறது” என்றார்.