சல்மான்கான் மற்றும் சோனாக்‌ஷி சின்ஹா நடிப்பில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான படம் தபாங். இப்படம் வெளியாகி செம ஹிட் அடித்தது. இதனை தொடர்ந்து 2012ல் தபாங் 2 படத்தை வெளியிட்டனர். இதுவும் வசூலில் பல சாதனைகளை படைத்தது.

Advertisment

salman khan

தற்போது சல்மான் கான், சோனாக்‌ஷி சின்ஹா, சுதீப் உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரபுதேவா இயக்கத்தில் தபாங் 3 உருவாகி வருகிறது. இந்த படத்தை சல்மான் தான் தயாரித்தும் வருகிறார்.

இந்த மூன்றாம் பாகம் வருகிற டிசம்பர் 20ஆம் தேதி உலகம் முழுவதும் மூன்று மொழிகளில் வெளியாகும் என்று படக்குழுவால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் தமிழக வெளியீட்டு உரிமையை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. தமிழகத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளையுமே கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ்தான் வெளியிடவுள்ளது.

Advertisment

இப்படம் வெளியாகும் அதே தினத்தில்தான் சிவகார்த்திகேயனை வைத்து கே.ஜே.ஆர் நிறுவனம் தயாரித்துள்ள ஹீரோ படமும் வெளியாகிறது. இந்த வருட பொங்கலுக்கு அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்தின் விநியோக உரிமையை வாங்கியது கே.ஜே.ஆர் நிறுவனம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.