Advertisment

பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க ஆயிரம் கோடி கேட்ட பிரபல நடிகர்; அதிர்ச்சியில் டிவி நிர்வாகம்

salman khan charge over rs1000 crore biggboss

இந்தியா முழுவதும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்றேதனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அதனால் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்தியாவில் முதலில் இந்தியில்தான் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அதற்கு கிடைத்த வரவேற்பை தொடர்நது பிற மொழிகளில் இந்நிகழ்ச்சிஒளிபரப்பாகி வருகிறது. நடிகர் சல்மான் கான் இந்தியில் கடந்த 13 ஆண்டுகால பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை15 சீசன்கள் முடிந்துள்ள நிலையில் விரைவில் 16 வதுசீசன் தொடங்கவுள்ளது.

Advertisment

இந்நிலையில் நடிகர் சல்மான் கான் 16 வது சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியைதொகுத்து வழங்குவதற்காக டிவி நிர்வாகத்திடம் இது வரை தனக்கு வழங்கப்பட்டுவந்த சமபளத்தை மேலும் 2 மடங்காக உயர்த்தி தர வேண்டும்என்று கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கடைசியாக நடைபெற்ற சீசனில் சல்மான்கானுக்குசம்பளமாகரூ.350 கோடி கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது அதைஉயர்த்தி ரூ.1050 கோடி கேட்டுள்ளதால்டிவி நிர்வாகம் அதிர்ச்சியடைந்துள்ளதாம். சல்மான் கான் தொகுத்து வழங்கும் இந்தி பிக்பாஸ் பெரும் வரவேற்பை பெறுவதால் அவர் கேட்ட தொகையை டிவி நிர்வாகம் அளிக்கும் என பாலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

Advertisment

Bollywood Salman Khan bigg boss
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe