Advertisment

சல்மான்கானைத் தென்னிந்திய சினிமாவில் அறிமுகப்படுத்தும் மோகன் ராஜா

Salman Khan act with Chiranjeevi Godfather film

மலையாளத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான 'லூசிஃபர்' படம் மாபெரும் வசூல் சாதனை நிகழ்த்தி வெற்றிபெற்றது. நடிகர் ப்ரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வெளியான இப்படம், பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்படுகிறது. அந்த வகையில்இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கைமோகன் ராஜா இயக்கி வருகிறார்.நடிகர் ராம்சரண், சூப்பர் குட் ஃபிலிம்ஸ் மற்றும் என்.வி.ஆர் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில், மெகா ஸ்டார் சிரஞ்சீவி நாயகனாகநடித்து வருகிறார்.'காட்ஃபாதர்' என பெயரிடப்பட்டுள்ளஇப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்நிலையில் இப்படத்தில்பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் சல்மான்கான் நடிக்கவுள்ளார். இதற்காக முதல் நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்ட சல்மான்கானை பூங்கொத்து கொடுத்து நடிகர் சிரஞ்சீவி வரவேற்றுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தையும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இப்படத்தில் மலையாளத்தில் பிரித்விராஜ்ராஜ் நடித்த கதாபாத்திரத்தில் சால்மன் கான் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் நடிகர் சல்மான்கான் முதல் முறையாகதென்னிந்திய சினிமாவில் அறிமுகமாக உள்ளதுகுறிப்பிடத்தக்கது.

Advertisment

lucifer chiranjeevi mohan raja Salman Khan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe