Advertisment

"என் இதயத்தின் ஆழத்திலிருந்து விரும்புகிறேன் நீங்கள் விரைவாக மீண்டு வரவேண்டுமென்று..." - சல்மான் கான் வேதனை!

frdhsfbsfd

Advertisment

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன் கரோனா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது உடல்நிலை பாதிப்படைந்தது. அதன் பிறகு தொடர் சிகிச்சையின் மூலம், அவரது உடல்நிலை முன்னேறிய நிலையில், தற்போது மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியனின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், கடந்த 24 மணி நேரமாக அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால் உயிர்காக்கும் உபகரணங்கள் மூலம் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும், அவரது உடல்நிலையை மருத்துவக் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அவரது உடல்நிலை மேலும் கவலைக்கிடமாக உள்ள நிலையில் பிரபலங்கள் பலரும் எஸ்.பி.பி விரைவில் குணமடைய வேண்டுமென பிரார்த்தனை செய்து வரும் நிலையில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் எஸ்.பி.பி குறித்து ட்வீட் செய்துள்ளார். அதில்... "பாலசுப்பிரமணியம் சார். அனைத்து வலிமையும், நம்பிக்கையும்... என் இதயத்தின் ஆழத்திலிருந்து விரும்புகிறேன்,நீங்கள் விரைவாக மீண்டு வரவேண்டுமென்று. எனக்காக நீங்கள் பாடிய ஒவ்வொரு பாடலுக்கும் நன்றி. எனக்காக நீங்கள் பாடிய தில் தேவானா, ஹீரோ பிரேம் பாடல்கள் சிறப்பு, ஐ லவ் யூ சார்" என கூறியுள்ளார்.

Salman Khan spb
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe