இந்தியாவில் அதிகரித்து வரும் கரோனா வைரஸ் பாதிப்பைத் தொடர்ந்து மே 3-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே வீட்டிலிருந்து ஒருவர் வெளியே வந்து செல்லலாம். அதற்கும் பல நிபந்தனைகள் கடைப்பிடிக்கப்படுகிறது.

Advertisment

avtor

இதனால் தினக்கூலி பணியாளர்கள் வருமானமின்றி தினசரி வாழ்வாதாரத்தை இழந்திருக்கின்றனர். தினசரி வருமானத்தை எதிர்நோக்கி இருக்கும் சினிமா தொழிலாளர்களுக்கு உதவுமாறு ஃபெப்சி சங்கம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க பிரபலங்கள் தங்களால் முடிந்த நிவாரண நிதியை அளித்தும் உதவி செய்தும் வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் 'கிழக்குச் சீமையிலே' படத்தில் நடித்த நடிகர் விக்னேஷ் சென்னை ஈகாட்டுத்தாங்கலில் 'சேலம் ஆர்.ஆர்'பிரியாணி கடையை நடத்தி வருகிறார். அங்கு,கஷ்டப்படும் சினிமா கலைஞர்களுக்கு மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இலவசமாகஉணவு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.