inox

கரோனா பாதிப்பால் தேசிய ஊரடங்கு கடந்த இரண்டு மாதங்களாக அமலில் உள்ளது. அதற்கு முன்பிலிருந்து திரையரங்கம், மால் போன்ற பொழுதுபோக்கு இடங்கள் மூடப்பட்டுவிட்டன. தற்போது லாக்டவுன் எடுக்கப்பட்டாலும், பொழுதுபோக்கு இடங்கள் மீண்டும் திறப்பது எப்போது என்பது பலருக்கும் கேள்வியாகவே உள்ளது.

Advertisment

Advertisment

இந்நிலையில் கொல்கத்தாவைச் சேர்ந்த 'ஐநாக்ஸ்' திரையரங்கு பணியாளர்கள் தங்களுக்கு ஊதியம் வழங்கவில்லை என்று சமூக வலைத்தளங்களில் குற்றம்சாட்டிவந்தனர்.இன்னும் சிலர் ;ஐநாக்ஸ்'குழுமத் திரையரங்கங்களின் முன்னால் எதிர்ப்பு வாக்கியங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், கோஷமிட்டும் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து 'ஐநாக்ஸ்' குழுமம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "சமூக வலைத்தளங்களில் பதிவிடும் நபர்கள் யாரும் 'ஐநாக்ஸ்' குழும ஊழியர்கள் கிடையாது. அவர்கள் 'இன்னோவ்' எனப்படும் நிறுவனத்தின் மூலம் பணிக்கு அமர்த்தப்பட்டவர்கள். 'ஐநாக்ஸ்' மற்றும் 'இன்னோவ்' நிறுவனத்துக்கு இடையேயான ஒப்பந்தம் கடந்த மார்ச் 31ஆம் தேதியே முடிந்துவிட்டது. இது இன்னோவ் நிறுவனத்துக்கும் முறையாக தெரியப்படுத்தப்பட்டது.

70,000 ஆயிரம் ஊழியர்களைக் கொண்ட 'இன்னோவ்' நிறுவனம் ஆண்டுக்கு 1,300 கோடி வருமானம் ஈட்டுகிற போதிலும் தன்னுடைய ஊழியர்களுக்கு ஊதியம் வழங்காமல் இழுத்தடிக்கிறது. அந்த ஊழியர்கள் மத்தியில் 'ஐநாக்ஸ்' நிறுவனம் குறித்து தவறான எண்னத்தை விதைக்கிறது. இதற்கு 'ஐநாக்ஸ்' குழுமம் கடுமையான கண்டனங்களைத் தெரிவிப்பதுடன் அந்த ஊழியர்களுக்கு ஊதியத்தை வழங்கி அவர்களிடம் உண்மையை எடுத்துரைக்குமாறு வலியுறுத்துகிறது" என்று கூறியுள்ளனர்.