/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ErwY_H-VEAMu1X3.jpg)
'கே.ஜி.எஃப் 1' படத்தின் தொடர்ச்சியாக வரும் 'கே.ஜி.எஃப் 2' படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் இப்பட இயக்குனர் இயக்கும் அடுத்தப்படமான 'சலார்' படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. 'கே.ஜி.எஃப்' படங்களைத் தயாரித்த ஹொம்பாளே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் பாகுபலி புகழ் பிரபாஸ் நாயகனாக நடிக்கவுள்ளார். 'சலார்' படத்தின் பூஜை நேற்று ஜனவரி 15 ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக 'கே.ஜி.எஃப்' நாயகன் யாஷ் கலந்து கொண்டார். இந்த மாத இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டுள்ளது. விரைவில் பிரபாஸுடன் நடிக்கவுள்ளவர்களையும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளது படக்குழு. பாகுபலி, கே.ஜி.எஃப் போலவே தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் 'சலார்' படம் வெளியிடப்படவுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)