/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1567.jpg)
கே.ஜி. எஃப் 2 படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பிரசாந்த் நீல், பிரபாஸை வைத்து சலார் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க, ஜெகபதிபாபு, உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். பெரும் பொருட்செலவில் பான் இந்தியா படமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இப்படம் கடந்த ஏப்ரல் மாதமேவெளியாகும் என படக்குழு அறிவிக்கப்பட்ட நிலையில், கரோனா காரணமாக இப்படத்தின் பணிகள் முடங்கியதால், ரிலீஸ் தள்ளிப்போனது. மேலும் படத்தின் க்ளிம்பஸ் வீடியோ விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதுவும் வெளியாகவில்லை. இதனால் பிரபாஸின்ரசிகர்கள் அப்செட்டில் இருந்தனர். இதனிடையே பிரபாஸின்ரசிகர் ஒருவர் சலார்படத்தின் அப்டேட் நீண்ட நாள் வெளியாகாததால் தற்கொலை செய்துகொள்ளபோவதாக படக்குழுவிற்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்ததுசமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறியது.
இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு படக்குழு படம் குறித்த தகவலை பகிர்ந்துள்ளது. அதில் வரும் 15 ஆம் தேதி சுதந்திர தின விழாவன்று படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது எதை பற்றிய அப்டேட் என்று படக்குழு சொல்லவில்லை. இருந்தாலும் நீண்ட நாட்களாக அப்டேட் எதுவும் வெளியாகாததால் இந்த அறிவிப்பையேஅவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)