‘ஒருத்தன் அசுரன் ஒருத்தன் அரசன்...’- நட்பை விவரிக்கும் ‘சலார்’

salaar first single released

கே.ஜி.எஃப் படஇயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'சலார்'. இப்படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க, பிரித்திவிராஜ் வில்லனாக நடிக்கிறார். மேலும் ஈஸ்வரி ராவ், ஜெகபதி பாபு, ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இப்படம் பான் இந்தியா படமாகத் தெலுங்கு, இந்தி, தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் டிசம்பர் 22 ஆம் தேதி வெளியாகவுள்ளது. கடந்த ஜூலை மாதம் இப்படத்தின் டீசர் வெளியானது. இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. அதைப் பார்க்கையில் பிரசாந்த் நீலின் வழக்கமான ஆக்‌ஷன் காட்சிகளும், பவர்ஃபுல்லான வசனங்களும் இடம்பெற்றிருந்தன. மேலும் நட்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து கதை அமைத்துள்ளனர்.

இதையடுத்து இப்படத்தில் யஷ் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக இளம் பாடகி தீர்த்தா ஒரு நிகழ்ச்சியில் சொல்லியிருந்தார். ஆனால் அது தவறுதலாக சொல்லிவிட்டதாக பின்பு சமூக வலைத்தளம் வாயிலாகத்தெரிவித்தனர்.இந்த நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தற்போது வெளியாகியுள்ளது. பிரபாஸ் மற்றும் பிரித்விராஜ் இருவரின் கதாபாத்திரத்திற்கும் இருக்கும் நட்பை விவரிக்கும் விதமாக இப்படம் அமைந்துள்ளது. ஐரா உடுப்பி பாட மதுரகவி வரிகள் எழுதியுள்ளார். பாடலில் ‘ஆனைஒருத்தன் சேனை ஒருத்தன்... இணைஞ்சு வலம் வரும் கலகமே... இழுக்கும் மூச்சிலும் இருவர் பேச்சிலும் நட்பு வாசமே...’, ‘ஒருத்தன் அசுரன் ஒருத்தன் அரசன்... கருத்தில் ஒத்தவரே...’ போன்ற வரிகள் இடம்பெற்றுள்ளது.

prabhas Prashanth Neel prithviraj salaar
இதையும் படியுங்கள்
Subscribe