Advertisment

காதலர் தினத்தை முன்னிட்டு பாடகி சக்திஸ்ரீ கோபாலன் வெளியிட்ட பாடல்!

fedsgvds

Advertisment

ஃபிலிம் ஃபேர் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்றுள்ள இசைக் கலைஞரான சக்திஸ்ரீ கோபாலனிடம் இருந்து இன்று காதலர் தினத்தன்று ஒரு சிறப்பு பாடல் வெளியாகியுள்ளது. ‘நீ போதுமே’ என்று பெயரிடப்பட்டுள்ள எளிமையான, மென்மையான இந்த தமிழ் பாப் சிங்கிள், காதலை கொண்டாடும் வகையில் அமைந்துள்ளது.

இப்பாடலை கடல் படத்தின் 'நெஞ்சிக்குள்ள' பாடல் புகழ் சக்திஸ்ரீ கோபலனே எழுதி, இசையமைத்து தயாரித்துள்ளார். கிடார் கலைஞரும் பாடகருமான அக்‌ஷய் யசோதரன் இதில் தோன்றுகிறார். பல்வேறு மொழிகளில் 100 பாடல்களுக்கும் மேல் பாடியுள்ள சக்திஸ்ரீ கோபாலன், ஏ ஆர் ரஹ்மான், அனிருத் ஆகியோருடன் பணியாற்றியுள்ளார். 2008-ம் ஆண்டிலிருந்தே பாடல்களை எழுதி, இசையமைத்தும் வருகிறார். சென்னையை சேர்ந்த பிக் சாம் மற்றும் சென்னை ஸ்ட்ரீட் பேண்ட் ஆகிய இசைக்குழுக்களில் அங்கம் வகிக்கும் அக்‌ஷய் யசோதரன், ரஹ்மானுடன் இசைப் பயணம் மேற்கொண்ட அனுபவம் கொண்டவராவார். இவர்களின் கூட்டு முயற்சியில் உருவாகியுள்ள ‘நீ போதுமே' பாடல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/qzcJIrxiXrU.jpg?itok=RNs7pD-G","video_url":" Video (Responsive, autoplaying)."]}

sakthishree gopalan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe