/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/100_77.jpg)
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி 'தோனி எண்டர்டெயின்மெண்ட்' என்ற படத்தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி முதல் தமிழ்ப்படமாக 'லெட்ஸ் கெட் மேரீட்' (Lets Get Married - LGM) என்ற தலைப்பில் ஒரு படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் நதியா மற்றும் யோகி பாபு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்கியுள்ளார்.
காமெடி கலந்த குடும்பப் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்ற நிலையில் அதில் கலந்துகொண்டு பேசிய சாக்ஷி தோனி, "இந்தப் படத்தைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் என் நண்பர்கள் மற்றும் எங்களுக்கு தெரிந்த பல பேரின் வாழ்க்கையில் இப்படத்தில் வரும் சம்பவங்கள் உண்மையாகவே நடந்திருக்கிறது. அப்பொழுது தான் தோன்றியது ஏன் இதை ஒரு படமாக எடுக்கக்கூடாது என்று. இப்படித் தான் இப்படம் உருவானது.
இதனை தமிழில் எடுப்பதற்கு மிக முக்கியக் காரணம் என் கணவர் தோனி தான். நாங்கள் எல்லோருமே தமிழில் படத் தயாரிப்பு தொடங்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டு தான் இருந்தோம். ஏனென்றால் முதல்முறையாக படத் தயாரிப்பில் இறங்கும் போது ஒரு மிகப்பெரிய சப்போர்ட் வேண்டும். இது போன்ற ஒரு சிறப்பான துவக்கத்திற்குச் சென்னை சரியான இடமாக இருக்கும் என்று தோன்றியது" என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)