sakshi agarwal

சிறுத்தை சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக அஜித் நடிக்கும் 'விஸ்வாசம்' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்து முடிந்தது. இதில் நடிகர் அஜித், நயன்தாராவுடன் வயதான கதாபாத்திரத்தில் நடித்தார். இதையடுத்து இதன் அடுத்தகட்ட படப்பிடிப்பு மும்பையில் நடக்கவிருக்கின்ற நிலையில் அதில் அஜித் இளமையான தோற்றத்துக்கு மாற இருக்கிறார். இதற்கிடையே 'காலா' படத்தில் நடித்த சாக்‌ஷி அகர்வால் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இளமை தோற்ற அஜித்துடன் விஸ்வாசம் படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இளமையான அஜித்துக்கு ஜோடியாக சாக்‌ஷி நடிப்பதாகவும் கூறப்படுகிறது.