ராஜா ராணி படம் மூலம் அறிமுகமாகி காலா, விஸ்வாசம், அரண்மனை 3 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளவர் சாக்ஷி அகர்வால். கடைசியாக கடந்த ஆகஸ்டில் வெளியான ‘தி கேஸ் டைரி’ என்ற மலையாளப் படத்தில் நடித்திருந்தார். இப்போது கைவசம் கெஸ்ட் மற்றும் தி நைட் ஆகிய படங்களை வைத்துள்ளார். இதனிடையே தனது நீண்ட நாள் காதலரை கடந்த ஜனவரியில் கரம் பிடித்தார்.
இந்த நிலையில் சாக்ஷி அகர்வால், தனக்கு நேர்ந்த ஒரு அதிர்ச்சி சம்பவத்தை பகிர்ந்துள்ளார். அதாவது வெஜ் ஆர்டர் செய்த நிலையில் நான் வெஜ் வந்துள்ளதாக வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நான் ஆர்டர் செய்த உணவில் பன்னீருக்குப் பதில் சிக்கன் இருந்தது. அதனால் உடனடியாக அதை தூக்கி எறிந்துவிட்டேன்” என்ற அவர், இதற்கு ஸ்விக்கி பொறுப்பேற்க வேண்டும் எனவும் என் நம்பிக்கையை புண்படுத்தியதற்கு நன்றி எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்த உணவகத்துடன் பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷனின் உடற்பயிற்சி நிறுவனம் விளம்பர ஒப்பந்தம் செய்திருந்ததால், “இது போன்ற தவறுகளை செய்யும் உணவகத்துடன் எப்படி பெரிய நிறுவனங்கள் கைகோர்த்திருக்கின்றன” எனக் கேள்வி எழுப்பினார். அதோடு சம்பவம் தொடர்பான வீடியோவைவும் அவர் சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்து தான் ஒரு பியூர் வெஜிட்டேரியன் என்பதை தெரிவித்துள்ளார்.