ராஜா ராணி படம் மூலம் அறிமுகமாகி காலா, விஸ்வாசம், அரண்மனை 3 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளவர் சாக்ஷி அகர்வால். கடைசியாக கடந்த ஆகஸ்டில் வெளியான ‘தி கேஸ் டைரி’ என்ற மலையாளப் படத்தில் நடித்திருந்தார். இப்போது கைவசம் கெஸ்ட் மற்றும் தி நைட் ஆகிய படங்களை வைத்துள்ளார். இதனிடையே தனது நீண்ட நாள் காதலரை கடந்த ஜனவரியில் கரம் பிடித்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சாக்ஷி அகர்வால், தனக்கு நேர்ந்த ஒரு அதிர்ச்சி சம்பவத்தை பகிர்ந்திருந்தார். அதாவது வெஜ் ஆர்டர் செய்த நிலையில் நான் வெஜ் வந்திருந்ததாக தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “நான் ஆர்டர் செய்த உணவில் பன்னீருக்குப் பதில் சிக்கன் இருந்தது. அதனால் உடனடியாக அதை தூக்கி எறிந்துவிட்டேன்” என்ற அவர், இதற்கு ஸ்விக்கி பொறுப்பேற்க வேண்டும் எனவும் என் நம்பிக்கையை புண்படுத்தியதற்கு நன்றி எனவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் அந்த உணவகத்துடன் பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷனின் உடற்பயிற்சி நிறுவனம் விளம்பர ஒப்பந்தம் செய்திருந்ததால், “இது போன்ற தவறுகளை செய்யும் உணவகத்துடன் எப்படி பெரிய நிறுவனங்கள் கைகோர்த்திருக்கின்றன” எனவும் கேள்வி எழுப்பியிருந்தார். இது சில சர்ச்சைகளை உருவாக்கியது.
இந்த விவகாரம் குறித்து தற்போது என்ன நடந்தது என்பதை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட வீடியோவில், “இரண்டு நாள் முன்னாடி நான் ஒரு உணவு ஆர்டர் பன்னேன். அந்த உணவுடைய பெயர் 'palak paneer, soya matar & millet pulao'. ஆர்டர் செய்யும் போதே அது ஒரு பிராப்பர் வெஜிட்டேரியனான்னு செக் பன்னேன். பியூர் வெஜிட்டேரியன்னுதான் போட்டிருந்துச்சு. டெலிவரி வந்ததும் இன்னொரு முறை செக் பண்ணேன். ஆர்டர் செய்த உணவு தான் கரெக்டா வந்திருக்கான்னு. முதல்ல மில்லெட் கூட சோயா சாப்பிட்டேன். அப்புறம் பன்னீர் எடுக்கும் போது, எனக்கு பேட் ஸ்மெல் அடிச்சுச்சு. அது நான் இதுவரையும் டேஸ்ட் பண்ணாத ஒரு ஸ்மெல். அது கண்டிப்பா பன்னீர் இல்லைன்ற விஷயம் எனக்கு தெரிஞ்சுச்சு.
அந்த பீஸை சாப்பிடும் போது அது சிக்கன்னு கண்டுபிடிச்சுட்டேன். உடனே கீழ துப்பிட்டேன். அப்புறம் வாந்தியும் எடுத்துட்டேன். ஏன்னா, இதுவரைக்கும் நான் என் லைஃப்ல சிக்கனே சாப்ட்டது இல்ல. யார் வேணுனாலும் எதை வேணுனாலும் சாப்பிடலாம். அது சிக்கன், மட்டன், பீஃப், போர்க் என எதுவா வேணா இருக்கலாம். அது அவங்களுடைய தனிப்பட்ட விருப்பம். ஆனா நான் இதுவரையும் சிக்கன் சாப்ட்டதே இல்ல. அதனால அது எனக்கு பிடிக்கல. இங்க உண்மையான சண்டை வெஜிட்டேரியனுக்கும் நான்-வெஜிட்டேரியனுக்கும் இல்ல. அதே போல் இந்துக்கும் இந்து அல்லாதவர்களுக்கும், மத உணர்வகளுக்கும், நம்பிக்கைக்கும் இல்ல. இது கஸ்டமருக்கும் முறையில்லாத சர்வீஸுக்கும் ஆனது. எனக்கு தெரிஞ்சு இந்த தவறு, பார்சல் பன்னும் போது நடந்திருகலாம். எதுவா இருந்தாலும் இதை ஏத்துக்க முடியாது” என்றர். மேலும் இனிமேல் அப்படி பண்ணாதீர்கள் என்று சம்பந்தப்பட்ட ஹோட்டல் நிரிவாகத்தை கேட்டுக் கொண்டுள்ளர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/09/24/175-2025-09-24-13-02-46.jpg)