Advertisment

‘உங்களுக்கு பிடித்தவர்களுக்கு கோவில் கட்டுங்கள்’- கொந்தளித்த பிக்பாஸ் சாக்‌ஷி

ராஜா ராணி, காலா, விஸ்வாசம் உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகையாக நடித்தவர் சாக்‌ஷி அகர்வால். சில படங்களில் நாயகியாகவும் நடித்துள்ளார். இந்த ஆண்டு நடைபெற்று வரும் பிக்பாஸ் டிவி நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் கலந்துகொண்டு, எவிக்‌ஷனில் வெளியேற்றப்பட்டார்.

Advertisment

sakshi

பிக்பாஸில் இவருடைய செய்கைகளால் இவர் மீது விமர்சனங்களும், ஆதரவும் இவருக்கு கிடைத்துள்ளது. இவரது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டா பக்கங்களை குறிப்பிட்டு இதர பிக்பாஸ் போட்டியாளர்களின் ஆதரவாளர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

தன்னை ட்ரோல் செய்பவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சாக்‌ஷி ட்விட்டரில், “ என் ட்வீட், என் உரிமை. அமைதியாக இருங்கள். உங்கள் வாழ்க்கையைப் பாருங்கள். இது ஒரு ஜனநாயக நாடு, இங்கு எனக்குப் பேசும் உரிமை இருக்கிறது. கிண்டலடிப்பவர்களே என்னைப் பின் தொடர்வதை விட்டுவிட்டு வேறு எதாவது பயனானதை செய்யுங்கள். உங்களுக்கு பிடித்தவர்களுக்காக கோவில் கட்டுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

bigg boss 3 sakshi agarwal
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe