Advertisment

காலாவில் என் கதாபாத்திரம்... - சாக்‌ஷி அகர்வால்!

sakshi agarwal

ரஜினி நடிப்பில் உருவான 'காலா' படத்தை பா.இரஞ்சித் இயக்கியுள்ளார். இப்படம் வரும் ஜூன் 7ஆம் உலகமெங்கும் வெளியாகயுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படத்தில் நானா பட்டேகர், சமுத்திரக்கனி, சம்பத், அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், ‘வத்திகுச்சி’ திலீபன், ரமேஷ் திலக், ஈஸ்வரி ராவ், ஹுமா குரேஷி, ஆகியோருடன் சஸ்பென்சான முக்கிய கதாபாத்திரத்தில் சாக்‌ஷி அகர்வால் நடித்துள்ளார்.

Advertisment

'காலா' பட அனுபவம் குறித்து நடிகை சாக்‌ஷி அகர்வால் பேசும்போது... "படத்தில் ரஜினியின் நடிப்பை கண்டு பிரமித்தேன். முதலில் அவருடன் நடிக்க பயந்தேன். பின்னர், அவருடன் பழகிய பிறகு அந்த பயம் போய் விட்டது. வில்லனாக நடித்திருக்கும் நானா பட்டேகர் மிகவும் திறமைசாலி. படப்பிடிப்பில் என்னுடன் பேசிக்கொண்டே படப்பிடிப்பு தளத்தின் செட்டை அப்படியே பத்து நிமிடத்தில் திறமையாக வரைந்து விட்டார். இவருடைய நடிப்பு வேற லவலில் இருந்தது. இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, திரைப்படங்களில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து இயக்கி இருப்பார். அதுபோல், இந்த படத்திலும் அனைவருக்குமே சிறந்த கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார். எனக்கும் நல்ல கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார். என்னுடைய கதாபாத்திரம் என்ன என்பது நீங்கள் தியேட்டரில் தான் பார்க்க வேண்டும். நான் யாருக்கு ஜோடி என்பதையும் தற்போது சொல்ல முடியாது" என சஸ்பென்ஸுடன் பேசி முடித்தார்.

Advertisment

lyca rajinikanth kaala rajini
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe