Advertisment

ஆக்‌ஷன் ஹீரோவாக தோனி; சாக்‌ஷி கொடுத்த அப்டேட்

sakshi about dhoni acting career

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி 'தோனி எண்டர்டெயின்மெண்ட்' என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தைத்தொடங்கி முதல் தமிழ்ப் படமாக 'லெட்ஸ் கெட் மேரீட்' (Lets Get Married - LGM) என்ற தலைப்பில் ஒரு படத்தைத் தயாரித்துள்ளார். இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் நதியா மற்றும் யோகி பாபு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்க வருகிற 28 ஆம் தேதி தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளாவில் வெளியாகிறது. தெலுங்கில் மட்டும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Advertisment

இதனால் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது படக்குழு. அந்த வகையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த படக்குழு, செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தனர். அப்போது தோனி ஹீரோவாக நடிப்பாரா என்ற கேள்வி கேட்கப்பட்ட நிலையில் அதற்குப் பதிலளித்த சாக்‌ஷி தோனி, "எல்லாம் நல்லபடியாக நடந்தால் தோனி நடிப்பார். அவர் 2006 முதல் தொடங்கி நிறைய விளம்பரப் படங்களில் நடித்துள்ளார். அவருக்கு நடிப்பு தெரியும். கேமராவைப் பார்த்து வெட்கப்படுபவர் அல்ல அவர். எனவே நல்ல கதை அமைந்தால் நிச்சயம் நடிப்பார்" என்றார். பின்பு எப்படிப்பட்ட ஜானரில் அப்படம் இருக்கும் என்ற கேள்விக்கு, "ஆக்‌ஷன் ஜானர்" எனப் பதிலளித்தார்.

Advertisment

sakshi dhoni harish kalyan MS Dhoni
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe