உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் இந்தியாவில் உயர்ந்துகொண்டே வருவதால் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் பலரும் இரவு, பகல் பாராது கடினமாக உழைத்து வருகின்றனர். இந்த கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு வரும் மே 3ஆம் தேதி ஊரடங்கை நீட்டித்துள்ளது. இதனால் திரையுலகமே முடங்கியுள்ள நிலையில், நடிகர்கள் பலரும் பொதுமக்களுக்கு வீடியோக்கள் மற்றும் சமூகவலைத்தள பதிவுகள் மூலம் கரோனா விழிப்புணர்வைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது நடிகை சாய் பல்லவி சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறை குறித்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்..
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/EVjTIKTUwAYGehF.jpg)
''இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் மற்றும் அனைவருக்கும் (விஷு) மலையாளப் புத்தாண்டு வாழ்த்துகள். இந்தச் சோதனையான காலத்தில் நாம் ஒருவருக்கொருவர் அனைத்து விதங்களிலும் உதவியாக இருப்போம். இந்த நகரத்தைச் சுத்தமாக வைக்க உதவும் சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறை அண்ணன்கள், அக்காக்கள் ஆகியோரின் தன்னலமற்ற சேவைக்கு நாம் என்றென்றும் கடன்பட்டிருப்போம்" எனப் பதிவிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)