saipallavi make his bollywood debut to pair with aamirkhan son

Advertisment

தமிழ், மலையாளம், தெலுங்கு எனத்தென்னிந்திய அளவில் பிரபல ஹீரோயினாக வரும் சாய் பல்லவி தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க, முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று முடிந்துள்ளது.

இந்நிலையில், சாய் பல்லவி இந்தியில் அறிமுகமாகவுள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட்டில் அமீர்கானின் மகன் ஜுனைத் கான், பெயரிடாத ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சுனில் பாண்டே இயக்க காதல் கதையாக உருவாகிறது. இதில் ஜுனைத் கானுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இத்தகவல் உறுதியாகும் பட்சத்தில் தென்னிந்திய மொழிகளைத்தாண்டி பாலிவுட்டிலும் சாய் பல்லவி கால் பதிப்பார்.

இந்த படம் ஜுனைத் கானின் இரண்டாவது படமாக உருவாகிறது. முதல் படமாக, யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் நடித்துள்ளார்.