Advertisment

'தந்தையை காப்பாற்ற போராடும் சாய்பல்லவி' - வைரலாகும் சூர்யா வெளியிட்ட ட்ரைலர்

saipallavi in 'gargi' trailer released by suriya, arya, lokesh kanagaraj and anirudh

சாய்பல்லவி, 'விரத பர்வம்' படத்தை தொடர்ந்து தற்போது 'கார்கி' படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கவுதம் ராமசந்திரன் இயக்கும் இப்படத்தை ரவிச்சந்திரன், ராமச்சந்திரன், ஐஸ்வர்யா, லட்சுமி உள்ளிட்ட நான்கு பேர் இணைந்து தயாரிக்கின்றனர். கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இப்படத்தின் போஸ்டர் மற்றும் கிளிம்ஸ் காட்சி சமீபத்தில் வெளியானது. தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளஇப்படத்தை தமிழில் சூர்யாவின் '2டி எண்டர்டெயின்மெண்ட்' நிறுவனம் வெளியிடுகிறது.

Advertisment

இந்நிலையில் 'கார்கி' படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை சூர்யா, ஆர்யா, லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் ஆகியோர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த ட்ரைலரில், சாய்பல்லவி கதாபாத்திரத்தின் தந்தையை காவல் துறையினர் சில காரணத்தால் கைது செய்கின்றனர். அவர்களிடம் இருந்து தந்தையை நேர்மையான முறையில் எப்படி போராடி காப்பாற்றுகிறாள் என்பதை விவரிப்பது போல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

Actor Arya actor suriya anirudh gargi movie lokesh kanagaraj sai pallavi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe