Advertisment

சாய்பல்லவியின் 'கார்கி' - ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

saipallavi gargi movie ott release date announced

Advertisment

சாய்பல்லவி நடிப்பில் கெளதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் 'கார்கி'. தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியான இப்படத்தை சூர்யாவின் '2டி எண்டர்டெயின்மெண்ட்' நிறுவனம் தமிழில் வெளியிட்டது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்திற்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக சாய்பல்லவியின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் 'கார்கி' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அதன் படி இப்படம் வருகிற 12-ஆம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இது தொடர்பாக சோனி லிவ் நிறுவனம் தனது சமூக வலைதளபக்கத்தில் "அனைவருக்கும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி, பல சினிமா விமர்சகர்களால் பாராட்டப்பட்ட சாய் பல்லவியின் கார்கி வரும் ஆகஸ்ட் 12 முதல்" என குறிப்பிட்டுள்ளது.

gargi movie sai pallavi
இதையும் படியுங்கள்
Subscribe