Advertisment

இசை நிகழ்ச்சிக்காக ஒன்றிணையும் ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி

saindhavi to sing in gv prakash concert after his divorce

Advertisment

இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் காதலித்து 2013ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இருவரும் இணைந்து பல்வேறு பாடல்கள் பாடியுள்ள நிலையில் அவை அனைத்தும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

இந்த சூழலில் இருவரும் தங்களது திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக கடந்த மே மாதம் அறிவித்தனர். இந்தக் காதல் ஜோடியின் பிரிவு கோலிவுட்டில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. பின்பு சைந்தவி, “ஜி.வி.பிரகாஷும் நானும் பள்ளிப் பருவத்தில் இருந்தே 24 வருடங்களாக நண்பர்கள், அந்த நட்பை தொடர்ந்து பேணுவோம்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து இருவரும் விமல் நடிப்பில் வெளியான சார் படத்தில் ‘பனங்கருக்கா’ பாடலில் இணைந்து பாடியிருந்தனர். இந்த நிலையில் மீண்டும் இருவரும் இணைந்து ஒரு இசை மேடையில் பாடவுள்ளதாக தெரிகிறது. மலேசியாவில் டிசம்பர் 7ஆம் தேதி நடக்கவுள்ள ஜி.வி.பிரகாஷின் இசை நிகழ்ச்சியில் சைந்தவி கலந்து கொள்கிறார். இதனால் ஒரே மேடையில் ஜி.வி.பிரகாஷும் சைந்தவியும் தோன்றவுள்ளனர்.

GV prakash Saindhavi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe