Advertisment

வெளியானது சாய்னா நேவால் பட ட்ரைலர்... விமர்சிக்கும் ரசிகர்கள்!

saina nehwal

உலக பேட்மிட்டன் அரங்கில், இந்தியாவின் அடையாளமாகத் திகழும் சாய்னா நேவாலின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டு வருகிறது. 'சாய்னா' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், சாய்னா நேவால் கதாபாத்திரத்தில், பரினிதி சோப்ரா நடிக்கிறார். அமோல் குப்தே இயக்கியுள்ள இப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகியுள்ளது.

Advertisment

ட்ரைலரின் முதல் பாதி நிமிடங்கள், சிறிய கிராமத்தில் இருந்து பேட்மிட்டன் வீராங்கனையாக வேண்டும் என்ற கனவுடன் சாய்னா நேவால் எவ்வாறு கிளம்பி வந்தார் என்பது குறித்தும், இரண்டாவது பாதிநிமிடங்களில் பேட்மிட்டன் வீராங்கனையாக எதிர்கொண்ட சவால்களை முறியடித்து அவர் எவ்வாறு வெற்றி கொண்டார் என்பது குறித்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. விறுவிறுப்பான மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகள் நிறைந்த இந்த ட்ரைலர் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், கடுமையான விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. இந்தியில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் ட்ரைலர், ஆங்கில சப்டைட்டில் ஏதுமின்றி வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment

சாய்னா நேவாலுக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் உள்ள நிலையில், ஆங்கில சப்டைட்டில் இல்லாமல் வெறும் இந்தியில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளதால், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

கடந்த வாரம் வெளியான சாய்னா படத்தின் டீசர் ஆங்கில சப்டைட்டிலுடன் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe