Skip to main content

வெளியானது சாய்னா நேவால் பட ட்ரைலர்... விமர்சிக்கும் ரசிகர்கள்!

Published on 08/03/2021 | Edited on 08/03/2021

 

saina nehwal

 

உலக பேட்மிட்டன் அரங்கில், இந்தியாவின் அடையாளமாகத் திகழும் சாய்னா நேவாலின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டு வருகிறது. 'சாய்னா' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், சாய்னா நேவால் கதாபாத்திரத்தில், பரினிதி சோப்ரா நடிக்கிறார். அமோல் குப்தே இயக்கியுள்ள இப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகியுள்ளது.

 

ட்ரைலரின் முதல் பாதி நிமிடங்கள், சிறிய கிராமத்தில் இருந்து பேட்மிட்டன் வீராங்கனையாக வேண்டும் என்ற கனவுடன் சாய்னா நேவால் எவ்வாறு கிளம்பி வந்தார் என்பது குறித்தும், இரண்டாவது பாதி நிமிடங்களில் பேட்மிட்டன் வீராங்கனையாக எதிர்கொண்ட சவால்களை முறியடித்து அவர் எவ்வாறு வெற்றி கொண்டார் என்பது குறித்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. விறுவிறுப்பான மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகள் நிறைந்த இந்த ட்ரைலர் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், கடுமையான விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. இந்தியில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் ட்ரைலர், ஆங்கில சப்டைட்டில் ஏதுமின்றி வெளியிடப்பட்டுள்ளது.

 

சாய்னா நேவாலுக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் உள்ள நிலையில், ஆங்கில சப்டைட்டில் இல்லாமல் வெறும் இந்தியில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளதால், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். 

 

கடந்த வாரம் வெளியான சாய்னா படத்தின் டீசர் ஆங்கில சப்டைட்டிலுடன் வெளியானது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சாய்னா நேவால் விவகாரம்: போலீசாரிடம் மன்னிப்பு கேட்ட சித்தார்த்

Published on 05/02/2022 | Edited on 05/02/2022

 

actor siddharth apology saina nehwal controversial tweet issue

 

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகர் சித்தார்த் சமூக பிரச்சனைகள் குறித்து கருத்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுவது வழக்கம். அத்துடன் அவ்வப்போது சில சர்ச்சையான கருத்துக்களையும் பதிவிட்டு சர்ச்சையில் சிக்கிக் கொள்வார். அந்த வகையில்  சமீபத்தில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் மற்றும் பெண் ஊடகவியலாளர் குறித்து ட்விட்டரில் அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக சர்ச்சையில் சிக்கிக்கொண்டார். அதனையடுத்து சித்தார்த்தின் கருத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் அவரிடம் விசாரணை நடத்துமாறு தேசிய மகளிர் ஆணையம் தமிழக காவல் துறைக்கு நோட்டீஸ் அனுப்பியது. 

 

இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் நடிகர் சித்தார்த்துக்கு சென்னை மாநகர போலீஸ் சம்மன் அனுப்பியது. இந்த விவகாரம் தொடர்பாக வீடியோ கான்பரன்ஸ் மூலம் வாக்குமூலம் அளித்த நடிகர் சித்தார்த், பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததற்கும், பெண் ஊடகவியலாளர் குறித்து அவதூறாக பேசியதற்கும் விசாரணையில் மன்னிப்புக் கேட்பதாக தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். மேலும் எனது மன்னிப்பை சம்பந்தப்பட்டவர்கள் ஏற்றுக் கொண்டதாகவும் விளக்கம் அளித்துள்ளார். இதனையடுத்து  நடிகர் சித்தார்த்தின் வாக்குமூலத்தை தேசிய மகளிர் ஆணையத்திற்கு சென்னை மாநகர போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். இதற்கிடையே நடிகர் சித்தார்த் பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலிடம் ட்விட்டர் மூலம் மன்னிப்பு கேட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

நடிகர் சித்தார்த்துக்கு சென்னை சைபர் க்ரைம் சம்மன்!

Published on 20/01/2022 | Edited on 21/01/2022

 

Chennai Cyber ​​Crime Summon to actor Siddharth!

 

சமூக வலைத்தளங்களில்  ஆக்டிவாக இருக்கும் நடிகர் சித்தார்த் சமூக பிரச்சனைகள் குறித்து கருத்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அத்துடன் அவ்வப்போது சில சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டு சர்ச்சையில் சிக்கிக் கொள்வதும் வழக்கம். அந்த வகையில்  இந்திய விளையாட்டு வீராங்கனை சாய்னா நேவால் பதிவுக்கு சித்தார்த்தின் பதில் பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

பிரதமர் நரேந்திர மோடி, அண்மையில் பஞ்சாப் சென்ற போது போராட்டக்காரர்கள் சாலை மறியல் செய்தனர். இதனையடுத்து பிரதமர் மோடி, தான் பங்கேற்க இருந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு டெல்லி திரும்பினார். இது தொடர்பாக  இந்திய விளையாட்டு வீராங்கனை சாய்னா நேவால் வெளியிட்ட பதிவுக்கு நடிகர் சித்தார்த் அளித்த பதில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனைத்தொடர்ந்து நடிகர் சித்தார்த் மன்னிப்பும் கேட்டார்.

 

ஆனால் அதற்கு முன்பே இந்த பதிவு பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி அவர் மீது வழக்குப்பதிவு செய்யவேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் மஹாராஷ்டிரா டிஜிபிக்கு கடிதம் எழுதி இருந்தது. தமிழக காவல்துறைக்கும் கடிதம் எழுதியிருந்தது. சித்தார்த்தின் மன்னிப்பை ஏற்றுக்கொண்ட சாய்னா, 'சித்தார்த்தை கடவுள் ஆசிர்வதிக்கட்டும்' என தெரிவித்திருந்தார்.

 

police

 

இந்நிலையில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட நடிகர் சித்தார்த்திற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'இரண்டு புகார்கள் வந்துள்ளது. சென்னை சைபர் க்ரைம் போலீசார் விசாரித்து வரும் நிலையில் சித்தார்த்துக்கு சம்மன் அனுப்பட்டுள்ளது. கரோனா  அதிகரித்துவரும் சூழலில் சித்தார்த்திடம் எந்த முறையில் விசாரணை நடத்துவது என ஆலோசனை நடத்தி வருகிறோம்'' என்றார்.