Sai Pallavi told don't want money before acting gargi

Advertisment

கெளதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி கார்கி படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ரவிச்சந்திரன், ராமச்சந்திரன், ஐஸ்வர்யா, லட்சுமி உள்ளிட்ட நான்கு பேர் இணைந்து தயாரிக்கின்றனர். கோவிந்த் வசந்தா இசையில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படம் குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தொடர்ந்து தனித்துவமான படங்களிலும், கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களிலும் நடித்து வரும் சாய் பல்லவி முதலில் படத்தின் திரைக்கதையை இமெயில் மூலம் அனுப்ப சொல்லுவார். அதை படித்த பிறகு கதை பிடித்திருந்தால் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் செய்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். அதே போன்று கார்கி படத்தின் கதையையும் இமெயிலில் வாங்கி படித்துள்ளார். அது அவருக்கு பிடித்துப்போகவே, தனக்கு சம்பளம் இப்போது தரவேண்டாம். அந்த பணத்தை படம் எடுப்பதற்கு முதலீடாக வைத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னதாக படக்குழு தரப்பிலிருந்து கூறப்படுகிறது. படத்திற்காக முன் பணம் கூட வேண்டாம், அதை வைத்து படம் எடுங்கள் என்று சாய் பல்லவி கூறியுள்ளது திரை பிரபலங்களிடையே ஆச்சர்யத்தையும், அதே சமயம் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.