/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/944_1.jpg)
தொலைக்காட்சி நடன நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்று, அதன்பின் மலையாளத்தில்பிரேமம்படத்தில் மலர் டீச்சராக அறிமுகமாகி பலரைக் கவர்ந்தார் சாய் பல்லவி. தற்போது தெலுங்குசினிமாவில்முன்னணி நடிகையாக வலம் வரும் வரும் இவர், தமிழில் சூர்யாவுடன் என்.ஜி.கே படத்திலும்,பாவக் கதைகள்என்றவெப்தொடரிலும் நடித்துள்ளார். இதனைத்தொடர்ந்து கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகவுள்ள ’எஸ்.கே 21’படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.
இதனிடையே சாய் பல்லவி தெலுங்கில்ராணாவுடன்இணைந்துவிராடபருவம் படத்தில் நடித்துள்ளார். சாய் பல்லவிநக்சலைட்டாகநடித்துள்ள இப்படம் வரும் 17 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனைத்தொடர்ந்து படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் சாய் பல்லவி மற்றும் படக்குழு இறங்கியுள்ளன.அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் சாய் பல்லவி பேசியது தற்போது சமூக வலைத்தளங்களில்வைரலாகிவருகிறது.
அதில், " சமீபத்தில் வெளியான காஷ்மீர்ஃபைல்ஸ்திரைப்படத்தில் காஷ்மீர்பண்டிட்டுகள்கொலைசெய்யப்படுவதாகக்காட்டியிருப்பார்கள். இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் காஷ்மீரில், காஷ்மீர்பண்டிட்டுகள்கொல்லப்படுவதும்,கரோனாகாலத்தில் மாடுகளைஏற்றிச்சென்ற இஸ்லாமியர்களைவழிமறித்து அவர்களைஜெய்ஸ்ரீராம் என்று சொல்லச்சொல்லித்தாக்குதல்நடத்திக்கொல்வதும் ஒன்றுதான். இரண்டுமே தவறுதான்" என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருத்துக்கு ஒரு சிலர் ஆதரவும், ஒரு சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)