sai pallavi speech about kamal in amaran 100th day celebration event

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் கடந்த ஆண்டு தீபாவளியன்று(அக்டோபர் 31) வெளியான படம் அமரன். இந்தப் படம் வீரமரணமடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாகியிருந்த நிலையில் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். அவரது மனைவியாக சாய் பல்லவி நடித்திருந்தார். ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்திருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertisment

இந்த நிலையில் இப்படத்தின் நூறாவது நாள் கொண்டாட்ட நிகழ்வு சென்னையில்நடைபெற்றது. இதில் படக்குழுவினர் தவிர்த்து படத்தின் வினியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டார்கள். அவர்களுக்கு கமல் கேடயம் வழங்கி கௌரவித்தார். பின்பு படக்குழுவினர் ஒவ்வொருத்தராக மேடைக்கு வந்து படம் தொடர்பாக தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

Advertisment

அந்த வகையில் சாய் பல்லவி மேடையில் கமல் குறித்து பேசுகையில், “கமல் சார் இல்லை என்றால் வேறு யாராலையுமே இந்த கதையை படமாக்கியிருக்க முடியாது. அந்தளவிற்கு அவர் கதை மேல் நம்பிக்கை வைத்திருக்கிறார். ராஜ்குமாரிடம் கமல் சார் எதாவது இன்புட் சொன்னாரா, என் நடிப்பு பற்றி கேட்டாரா என கேட்பேன். அவர் கமல் சார் எதுவுமே கேட்கவில்லை. ஆனால் ஒன்று மட்டும் சொன்னார். நல்லக் கதை உங்ககிட்ட இருக்கு, அதை படமாக்குங்க, நான் எடிட் டைம்ல பாக்குறேன் என்றார். கமலுக்கு இருக்கிற அறிவுக்கு ஈஸீயாக அவர் எல்லாத்தையும் கனிச்சிடமுடியும். ஆனால் அவர் இயக்குநரை நம்பி சப்போர்ட் பன்னார். இது போன்ற நம்பிகை அவருக்கு வர காரணம், அவர் சினிமாவை நம்புகிறார்.

சினிமா இப்போது உயிருடன் இருப்பதற்கு அவரும் ஒரு காரணம். இது ஒரு தயாரிப்பாளராக அவரைப் பற்றி நான் சொல்வது. ஆனால் ஒரு நடிகராக அவரிடம் நிறைய கேள்விகள் இருக்கிறது. நடிப்பில் எவ்ளோவோ எமோஷன் இருக்கிறது. எந்த எமோஷன் பண்ணாலும் அதில் நூறு சதவீதத்தை அவர் கொடுக்கிறார். நான் பிறந்த வருடத்துக்குச் சமமாகக் அவர் படம் பண்ணியிருக்கிறார். ஆனால் இப்போதும் எதாவது புதிதாக முயற்சி செய்கிறார்” என்றார்.

Advertisment