கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான 'பிரேமம்' படத்தின் மூலம், திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மலையாளம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடிக்கத் தொடங்கினார். தமிழைவிட தெலுங்கு சினிமாவில் அவர் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து, தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகை அந்தஸ்திற்கு உயர்ந்துள்ளார்.
இந்த நிலையில், சாய் பல்லவியின் தங்கை பூஜா, நடிகையாக அறிமுகமாகவுள்ளார். இயக்குனர் ஏ.எல்.விஜய் தயாரிப்பில், ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா இயக்கும் படத்தில், பூஜா நடிகையாக அறிமுகமாகிறார். இப்படத்தில், நடிகை சமுத்திரக்கனியின் மகளாக அவர் நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கோவையில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.