Skip to main content

'செல்வராகவனிடம் ஹோம் வொர்க் செய்ய தேவையில்லை. ஆனால்...' - சாய் பல்லவி 

Published on 23/05/2019 | Edited on 23/05/2019

சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடித்து, செல்வராகவன் இயக்கியுள்ள என்.ஜி.கே படம் வரும் மே 31ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில் இப்படம் குறித்து சாய் பல்லவி பேசும்போது...

 

saipallavi

 

 

 

"முதல் நாள் படப்பிடிப்பு தளத்திற்கு வரும்போதே இது கோவில் மாதிரி, ஆகையால் கோவிலுக்கு செல்லும்போது எப்படி பக்தியோடு செல்வோமோ அப்படிதான் வரவேண்டும் என்று கூறிவிட்டார் செல்வராகவன். நானும் முதலில் மிக கண்டிப்போடு இருப்பார் என்று நினைத்தேன். ஆனால் அவருடைய சினிமா என்ற பள்ளிக்கூடத்தில் எளிமையாக கற்றுக் கொள்ளலாம் என்று 2, 3 நாட்களில் புரிந்துகொண்டேன். பொதுவாக படப்பிடிப்பு தளங்களில் செல்போன் உபயோகிப்போம், மற்ற படங்களைப் பற்றி பேசுவோம். ஆனால், செல்வராகவன் படப்பிடிப்பு தளத்தில் 100 சதவீதம் அப்போது நடிக்க வேண்டிய காட்சியைப் பற்றிய வசனங்களை வைத்துக் கொண்டு ஆளுக்கொரு இடத்தில் நின்று கொண்டு பயிற்சி எடுத்துக் கொண்டிருப்போம். ஒழுக்கம் என்றால் என்ன? என்று அங்குதான் கற்றுக் கொண்டேன். மேலும், படப்பிடிப்பு நடப்பதற்கு முதல் நாளே அந்த காட்சிக்கு தேவையான வசங்களை முன்பே வாங்கி வீட்டில் பயிற்சி எடுத்து கொண்டு வருவோம். ஆனால், படப்பிடிப்பு தளத்திற்கு வந்த பிறகு அவர் சொல்வதைக் கேட்டு நடித்தால் தான் சரியாக இருக்கும். ஹாம் வொர்க் தேவையில்லை. ஒரு வசனத்திற்கு எப்படி முகபாவனை செய்ய வேண்டும்? எப்படி அழ வேண்டும் என்று ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவாக சொல்லிக் கொடுப்பார். அதுமட்டுமில்லாமல் கோபப்பட்டு நடிக்கும் காட்சிகளில் கூட மூச்சுவிடுவது வெளியே தெரியக்கூடாது என்று கூறுவார். அவர் நினைக்கும் நடிப்பு நம்மிடம் வரும்வரை விடமாட்டார்" என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

நேர்த்தியென்று ஏதுமில்லை; தன் படம் குறித்து இயக்குநர் செல்வராகவன்

Published on 01/06/2023 | Edited on 01/06/2023

 

 selvaraghavan tweet about ngk movie

 

இயக்குநர் செல்வராகவனின் படங்கள், வெளியான பத்தாண்டுகளுக்கு பிறகு தான் கொண்டாடப்படும் என்று சொல்வதுண்டு. அதற்கேற்றார் போல் புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற திரைப்படங்கள் மீண்டும் திரையரங்கில் திரையிட்டபோது பெரிய வரவேற்பைப் பெற்றன. ஆனால், இதை இப்போதே பார்க்க முடியவில்லையே. பத்து வருடம் கழித்தெல்லாம் எப்படி பார்ப்பது போன்ற படங்களையும் இயக்கியிருந்தார். அதை அவரும் ஒப்புக்கொள்ளும் வகையில் அவரது படம் குறித்த பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் என்.ஜி.கே. இப்படத்தில் சாய்பல்லவி, ரகுல் ப்ரீத் சிங், இளவரசு மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தையே பெற்றது. வணிக ரீதியில் பெரிய வசூலையும் ஈட்டவில்லை. இப்படம் வெளியாகி நான்கு ஆண்டுகளான நிலையில் படம் குறித்து இயக்குநர் செல்வராகவன் ஒரு ட்வீட் செய்துள்ளார் அதில் “நேர்த்தி என்று எதுவும் இல்லை. எங்களிடம் குறைபாடுகள் உள்ளன. அது நல்லது. ஒரு வைரத்தை போன்றது” என்று பதிவிட்டுள்ளார்.

 

 

Next Story

யார் அந்த ரகு, செந்தில்?... செல்வராகவன் அடுத்த படம் குறித்து ட்வீட்...

Published on 27/02/2020 | Edited on 27/02/2020

கடந்த வருடம் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் என்.ஜி.கே படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. செல்வராகவனின் ரசிகர்களின் பல வருட காத்திருப்பிற்கு பின்னர் வந்த படம் என்பதால் இந்த படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பு இருந்தது. இந்த படத்திற்கு முன்பாக செல்வராகவன் எடுத்த மன்னவன் வந்தானடி, நெஞ்சம் மறப்பதில்லை படம் இரண்டு வருடங்களுக்கும் மேலாக ரிலீஸாகாமல் உள்ளது. இதில் நெஞ்சம் மறப்பதில்லை படம் விரைவில் வெளியாகலாம் அதற்கான பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருப்பதாக தகவல் வெளியானது.
 

selvaraghavan

 

 

இந்நிலையில் செல்வராகவன் தன்னுடைய அடுத்த படத்தின் வேலைகளை எப்போதோ தொடங்கிவிட்டார். கலைப்புலி. எஸ். தாணு தயாரிப்பில் தனுஷை வைத்து அடுத்த படத்தை எடுக்க போகிறார் என்றெல்லாம் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

தற்போது ட்விட்டரில் அடுத்த படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலையின் இறுதி கட்டத்தில் இருப்பதாக ட்விட்டரில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு தெரிவித்துள்ளார் செல்வராகவன். அந்த ஸ்கிரிப்டில் ரகு, செந்தில் என்று இரண்டு கதாபாத்திரங்களின் பெயர் தெரிகிறது. அதை குறிப்பிட்டு இது என்ன படமாக இருக்கும் என்று ரசிகர்கள் ஆர்வமாக சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.