Advertisment

தனுஷை முந்திய சாய் பல்லவி!

sai pallavi

Advertisment

2015ஆம் ஆண்டு மலையாளம் திரைப்படத்தில் மலர் டீச்சராக அறிமுகமாகி, பல இளைஞர்களின் மனதில் பட்டா போட்டவர் சாய் பல்லவி. தமிழ் நாட்டைச் சேர்ந்த இவர், மலையாளத்தில் அறிமுகமாகி தெலுங்கில் கொடிகட்டி பறக்கிறார். தமிழில் தற்போதுவரை இரண்டு படங்கள் நடித்திருக்கிறார். சமீபத்தில்தான் தனுஷுடன் மாரி-2 படத்தில் நடித்திருந்தார்.

சாய் பல்லவி தெலுங்கில் வருணுடன் நடித்த ஃபிடா படத்தில் வந்த வச்சின்டே' பாடல்தான் தென்னிந்திய சினிமாவில் யூ ட்யூபில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட வீடியோவாக மாறியுள்ளது. சுமார் 17.3 கோடி பார்வையாளர்களை பெற்றதன் மூலம், இதற்கு முந்தைய சாதனையாக இருந்த தனுஷின் கொலவெறி பாடல் சாதனையை முறியடித்துள்ளது. தனுஷின் கொலவெறி பாடல் 17.2 கோடி பார்வையாளர்கள் பார்த்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிக ரசிகர்களை கொண்ட அஜித், விஜய், அல்லு அர்ஜுன், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரின் பாடல்கள் கூட இந்த அளவுக்கு பார்வையாளர்களை ஈர்த்தது இல்லை. சாய் பல்லவியின் பாடல் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்திருக்கிறது.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe