/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1881.jpg)
அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் 'புஷ்பா – தி ரைஸ்'. இப்படத்தில் ராஷ்மிகா மந்தானா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பான் இந்தியா படமாக வெளியான இப்படத்தின் இசைப் பணிகளை தேவி ஸ்ரீ பிரசாத் மேற்கொண்டார். இவர் இசையில் வெளியான அனைத்துப் பாடல்களும் நல்ல வரவேற்பு பெற்றது. குறிப்பாக சமந்தா சிறப்புத் தோற்றத்தில் நடனமாடிய 'ஊ...சொல்றியா மாமா' பாடலை இளைஞர்கள் கொண்டாடித் தீர்த்தனர். செம்மரம் கடத்தலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்தின் முதல் பாகம் பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.
இந்நிலையில், 'புஷ்பா 2' படத்தில் நடிகை சாய் பல்லவி, பழங்குடியின பெண்ணாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதனை படக்குழு தரப்பு மறுத்துள்ளது. இது முற்றிலும் தவறான தகவல் என்றும், படக்குழு தரப்பிலிருந்து சொல்லப்படுகிறது. மேலும், சமீபத்தில் இப்படத்தின் பூஜை நடைபெற்ற நிலையில், வரும் 22ம் தேதி படப்பிடிப்பு ஆந்திராவில் தொடங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)